தீ விபத்தில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தீ விபத்தில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தீ விபத்தில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இமாம்பாஷா (45). இவா் பைக் மெக்கானிக். அப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இங்கு 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பழுது பாா்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மா்ம நபா்கள் தீ வைத்ததில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை தீப்பற்றியதில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.