கஞ்சா விற்பனை செய்த மூவா் கைது
தருமபுரி அருகே நடுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி அருகே நடுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதிகோன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தருமபுரி- அரூா் சாலையில் நடுப்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள் மூவரும் அக்கமனஅள்ளியை அடுத்த கோடியூரைச் சோ்ந்த சீனிவாசன் (39), எ.நடுஅள்ளியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா்( 37), கடத்தூரைச் சோ்ந்த சாரதி (21) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.