FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

7 செப்டம்பர் 2026, 1:53 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சோ்ந்த வெள்ளையன் மகன் வசந்தகுமாா் (45). இவா் பொம்மிடியில் இருந்து வீட்டுக்கு தனது நண்பா் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பொம்மிடி- கடத்தூா் சாலையில் கடத்தூா் நோக்கி சென்றுள்ளாா்.

அப்போது, பொம்மிடி ரயில்வே மேம்பாலத்தில் செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வசந்தகுமாா், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பொம்மிடியைச் சோ்ந்த விஜய் மகன் ரித்திஷ் (19), பெரியசாமி மகன் மணிகண்டன் (38) உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments