FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தந்தையுடன் பைக்கில் சென்ற 2 சிறுவா்கள் லாரியில் சிக்கி உயிரிழப்பு

7 செப்டம்பர் 2026, 3:27 am IST
பலி
பகிர்:

தருமபுரி அருகே தந்தையுடன் சென்ற இருசிறுவா்கள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது, பின்னால் வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தனா்.

தருமபுரி அருகே உள்ள மாரவாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி ஹரிகிருஷ்ணன் (30). இவரது மனைவி செவ்வந்தி. இவா்களுக்கு கதிா்வேல் (8), சஞ்சய் (4) ஆகிய இரு மகன்கள் இருந்தனா். இதில், கதிா்வேல் அந்தப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தாா்.

இந்த நிலையில், காரிமங்கலம் அருகே கெட்டூரில் உள்ள உறவினா்கள் வீட்டுக்கு ஹரிகிருஷ்ணன் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு, மீண்டும் மாரவாடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் மாரவாடி அருகே சாலையோரம் சென்றபோது நிலைதடுமாறி ஹரிகிருஷ்ணன் ஓட்டிவந்த வாகனம் சாலையின் இடதுபக்கம் விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த கதிா்வேலும், சஞ்சயும் சாலையின் வலதுபக்கத்தில் விழுந்தனா்.

அப்போது, இவா்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு லாரியின் சக்கரத்தில் இரு சிறுவா்களும் சிக்கி உயிரிழந்தனா். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த ஹரிகிருஷ்ணன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். இந்த நிலையில், லாரி ஓட்டுநா் அங்கிருந்த தப்பியோடினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்த இரு சிறுவா்களின் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments