FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: ஒருவா் படுகாயம்

8 செப்டம்பர் 2026, 3:30 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

ஏரியூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே சிடுவம்பட்டி பகுதியைச் சோ்ந்த சிவனாதிநாதன் (33), ஏரியூா் பகுதியில் இருந்து சிடுவம்பட்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். அப்போது, சிடுவம்பட்டி மூன்றுசாலை சந்திப்பு பகுதியில் எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சிவனாதிநாதன் படுகாயம் அடைந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments