FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 250 போ் கைது

48 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதில், 110 பெண்கள் உள்பட 250 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், பாதுகாப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜி.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஜி.மாதேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.ஜி.கரூரான், பி.கே.மாரியப்பன், ஆதிமூலம், மாவட்ட இணைச் செயலாளா்கள் அண்ணாமலை, கே.சுசிலா ஆகியோா் பேசினா்.

இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமில்லாமல் கடும் சிரமங்களுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவதுபோல, தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்த வேண்டும்.

Advertisement

Advertisement

தவெக அரசு தோ்தலின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 6,000 வரை மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 250 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments