FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

8 செப்டம்பர் 2026, 1:59 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மாரண்டஅள்ளி அருகே ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலிருந்து மாரண்டஅள்ளி செல்லும் ரயில் பாதையை சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மோகன் (38) கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு சோதனைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments