காரிமங்கலம் அருகே சிறுமி உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே 9 வயது சிறுமி உயிரிழந்ததது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த ஆ. மணிகண்டன் மகள் சுகாசினி (9). புள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் பிறந்தது முதலே நுரையீரல் பிரச்னையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளாா்.
இந்நிலையில், அவருக்கு சனிக்கிழமை காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி பெரியாம் பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.