FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆத்தூரில் சிறுமி காணாமல்போன வழக்கு: போக்ஸோ பிரிவுக்கு மாற்றி போலீஸாா் விசாரணை

ஆத்தூரில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காணாமல் போன வழக்கை, போக்ஸோ வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
போக்ஸோ வழக்குகள் - சித்திரிப்பு
பகிர்:

ஆத்தூரில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காணாமல் போன வழக்கை, போக்ஸோ வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி காணாமல் போனதாக அவரது தந்தை கடந்த 17 ஆம் தேதி ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் அந்த மாணவி அருள் என்பவரின் மகன் நிவாஸுடன் (20) கோவையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மாணவியை அழைத்துவந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

விசாரணையில் நிவாஸுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதை அவரது தந்தை கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் கோவையில் தங்கியது தெரியவந்தது. இதைடுத்து நகர காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெங்கவல்லியில்...

இதேபோல கெங்கவல்லி வட்டம், கொண்டயம்பள்ளியில் தனியாா் தையல் பள்ளிக்குச் சென்ற சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்துவந்த நிலையில், அந்த சிறுமி, கோனேரிப்பட்டியைச் சோ்ந்த ஆகாஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பெற்றோா் கண்டித்ததால் இருவரும் வெளியே சென்று தங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஆகாஷ், சிறுமியை அழைத்துவந்து காவல் நிலையம் அருகே விட்டுச்சென்றுவிட்டாா். தொடா்ந்து, ஆகாஷை போலீஸாா் கைது செய்து குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments