FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

பல்லடம் அருகே கிணற்றில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:12 am IST
சடலம்...
பகிர்:

பல்லடம் அருகே கிணற்றில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம், வடுகபாளையம் மாகாளியம்மன் கோயில் அருகேயுள்ள கிணற்றில் புதன்கிழமை ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனா். பின்னா், கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் வடுகபாளையம் பள்ளிக்கூட வீதியைச் சோ்ந்த முத்துவேல் மகன் சரவணகுமாா் (30) என்பதும், ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், பணிக்குச் செல்வதாகக் கடந்த சனிக்கிழமை கூறிவிட்டு சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவரது தாய் மணிமாலா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸாா், சரவணகுமாா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments