FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு:23,609 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 23,609 பேர் எழுதினர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 23,609 பேர் எழுதினர்.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில், 94 அரசுப் பள்ளிகள், 55 மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள், 8 சுயநிதிப் பள்ளிகள், 1 நகராட்சி மேல்நிலைப் பள்ளி, 1 அரசு நிதியுதவி பெறும் பள்ளி என மொத்தம் 159 பள்ளிகளைச் சேர்ந்த 11,385 மாணவர்கள், 11,695 மாணவியர், தனித்தேர்வர்களாக 837 பேர் என மொத்தம் 23,917 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.

ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கான மொழித் தாள்-1-க்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வினை கண்காணிக்க 51 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 51 துறை அலுவலர்கள், 44 கூடுதல் துறை அலுவலர்கள், 1,311 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் மாற்றுத் திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத 26 பேர் நியமிக்கப்பட்டனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் வருவாய்த் துறையினரைக் கொண்டு சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டது. அத்துடன் அரசு தேர்வுகள் இயக்குநரின் சார்பில் மாவட்டப் பொருளராக மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே.தமிழரசு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

எல்லா தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன் மாணவர்களுக்கு தேர்வின் போது திடீர் சுகாதாரக் குறைபாடு ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் முதல் தாள் தேர்வை 174 மாணவர்கள், 134 மாணவியர் என மொத்தம் 308 பேர் எழுத வரவில்லை என கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments