ஒசூரில் ஒரு டன் மலர்களால் திமுக தலைவர் கருணாநிதிக்கு மலரஞ்சலி
தமிழக முன்னாள் முதல்வரும், திராவிடக் கழகத்தின் தலைவருமான மு. கருணாநிதியின் மறைவையொட்டி அவருடைய உருவப் படத்துக்கு ஒசூரில் மலர் வியாபாரிகள் ஒரு டன் மலர்களால் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திராவிடக் கழகத்தின் தலைவருமான மு. கருணாநிதியின் மறைவையொட்டி அவருடைய உருவப் படத்துக்கு ஒசூரில் மலர் வியாபாரிகள் ஒரு டன் மலர்களால் அஞ்சலி செலுத்தினர்.
ஒசூரில் இயங்கி வரும் 2,500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சாலைகள் மூடப்பட்டன. சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.
ஒசூரில் வியாபாரிகள் அவர்களாகவே முழு கடை அடைப்பு செய்தனர். உணவு விடுதிகள், சினிமா திரைஅரங்குகளும் காட்சிகள் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன. தள்ளூ வண்டி வியாபாரிகள் கருணாநிதி மறைவினால் கடைகளை வைக்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புதன்கிழமை காந்தி சாலை, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுரு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருந்து கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
தமிழகப் பேருந்துகள், கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படாததால், ஒசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிக குறைந்த அளவிலேயே
காணப்பட்டது.
முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், கட்சியினர் அவரது படத்தை கைகளில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மவுன ஊர்வலம் நடத்தினர். மேலும் ஒசூர் பேருந்து நிலையம் எதிரே பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் நகரத் துணைச் செயலாளரும், பூ வியாபாரிகள் சங்கத் தலைவருமான கே. திம்மராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்தை சுற்றிலும் ஒரு டன் அளவிலான ரோஜா, சாமந்தி, அரளி, பன்னீர் இலை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பூக்களைக் கொண்டு அலங்கரித்து மலரஞ்சலி
செலுத்தினர்.
பின்னர், தீபம் ஏற்றி வைத்து வணங்கி, 2 நிமிடம் மெளனஅஞ்சலி அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியால் தொடக்கி வைக்கப்பட்ட ஒசூர் ஒன்று மற்றும் 2-ஆவது சிப்காட் பகுதியில் இயங்கி வரும் 2,500 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டதாக ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் , பொருளாளர் வேலமுருகன் தெரிவித்தனர்.
தமிழக அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் இயங்காததால் துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த ஒசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. திரையரங்குகளும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
ஒசூரில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் தானாக முன்வந்து புதன்கிழமை கடைகளை மூடியிருந்தனர். தொழிலாளர் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் ஒசூரில் உணவகங்கள் மூடியிருந்ததால் உணவின்றி தவித்து வந்தனர். ஒசூரில் நகைக் கடைகள், அரிசி, பருப்பு, இரும்பு, காய்கறி, மருந்துக் கடைகள் என அனைத்துக் கடைகளும் மூடியிருந்தன.
கருணாநிதி தொடக்கி வைத்த ஒசூர் உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. இதனால், உழவர்சந்தை மூடியிருந்தன.
ஒசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி, பேரிகை அஞ்செட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தெருக்குத் தெரு கருணாநிதி படத்தை வைத்து திமுகவினர் மற்றும் இளைஞர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.