லாரி மோதியதில் தொழிலாளி சாவு
ஒசூரை அடுத்த சிப்காட்டில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
ஒசூரை அடுத்த சிப்காட்டில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
ஒசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியைச் சேர்ந்தவர் சுரேந்திரபாபு (37). பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவர் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பெங்களூரு- ஒசூர் சாலையில் சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சுரேந்திரபாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சுரேந்திரபாபு உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.