கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3.67 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 3. 67 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 3. 67 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: தேசிய கால் மற்றும் வாய் காணை நோய் (கோமாரி) தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2017-2018-ஆம் ஆண்டில் 15-ஆவது சுற்றில் தமிழகம் முழுவதும் உள்ள பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செப்டம்பர் 1 முதல் 21-ஆம் தேதி வரையில் தொடர்ந்து போடப்பட உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 67 ஆயிரத்து 550 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி குழுவினரால் அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்குத் தடுப்பூசி போடப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு அந்தந்தக் கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று, கோமாரி நோய் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.