FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு  சுற்றுலா வந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கணக்காளர் காவிரி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு  சுற்றுலா வந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கணக்காளர் காவிரி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
கர்நாடக மாநிலம், பெங்களூருவை  அடுத்த சித்தாபுரா பகுதியைச் சேர்ந்த ராஜண்ணா மகன் ரமேஷ் (49). இவர்  அதே பகுதியில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா
வந்தார். 
அப்போது நண்பர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் குளித்துவிட்டு ஊருக்கு திரும்பும் நிலையில், ரமேஷ் காணாமல் போனார்.  இதையடுத்து,  ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தேடிய போது காவிரி கரையோரப் பகுதியில் அவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments