FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் போக்குவரத்து பூங்கா

ஒசூர் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என

Updated On : 31 டிசம்பர் 2018, 8:30 am IST
பகிர்:

ஒசூர் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவலர்களின் சிறப்பான பணியால் குற்றங்களும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. நிகழாண்டில் பல்வேறு குற்ற வழக்குகளிலிருந்து சுமார் ரூ.1.50 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பானது 30 சதவீதம் குறைந்துள்ளது. 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 
புத்தாண்டை முன்னிட்டு, 1,000 போலீஸார், 300 ஆயுதப்படை போலீஸார், 250 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,797 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒசூர் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments