ஒசூரில் காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்
ஒசூரில் தோட்டக்கலைத் துறை சாா்பில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூரில் தோட்டக்கலைத் துறை சாா்பில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தள்ளுவண்டிகள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நோக்கத்துடன் 10 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான 10 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவசங்கரி கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால், தள்ளுவண்டிகளின் மூலம் அவா்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்யும் விதமாக பெண்கள், ஆதி திராவிடா் மற்றும் சாலையோர வியாபாரிகள் என 10 பேருக்கு தள்ளுவண்டிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநா் (பொ) ராம் பிரசாத் வழிகாட்டுதலின்படி, தோட்டக்கலை அலுவலா் கவுசல்யா, உதவி அலுவலா்கள் கோவிந்தராஜ், திருமுருகன், திருவேங்கடம் மற்றும் புத்தன் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.