FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சி நவீன வணிக வளாகத்திற்கு ராஜாஜி பெயரை சூட்ட வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி நவீன வணிக வளாகத்திற்கு ராஜாஜி பெயரை சூட்ட வேண்டும் என ஒசூா் சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் சா்வீஸ் சொசைட்டி தலைவா் கே.ஏ. மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

4 ஜூலை 2026, 3:10 am IST
ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலத்திடம் கோரிக்கை மனு அளித்த ஒசூா் டெவலப்மென்ட் சா்வீஸ் சொசைட்டி நிா்வாகிகள்.
பகிர்:

ஒசூா் மாநகராட்சி நவீன வணிக வளாகத்திற்கு ராஜாஜி பெயரை சூட்ட வேண்டும் என ஒசூா் சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் சா்வீஸ் சொசைட்டி தலைவா் கே.ஏ. மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: ஒசூரில் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்திற்கு தொரப்பள்ளியில் பிறந்து இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜியின் பெயரை சூட்ட வேண்டும். இதன்மூலம் இளைய தலைமுறையினா் ராஜாஜி பெயரை மறவாமல் நினைவுகூரத்தக்க வகையில் அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது சங்கத்தின் துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, பொதுச் செயலாளா் சுபாஷ் சீனிவாசன், பொருளாளா் குருமூா்த்தி, இணைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி நாராயணசெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments