FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கஞ்சா: வட மாநில தொழிலாளா்கள் இருவா் கைது

ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:46 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அட்கோ காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன், போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேரண்டப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி அருகே நின்றிருந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இவைரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலம், ககாரிய மாவட்டம், தப்பீா் கண்டிய கிராமத்தைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா் (32), மெகாப்பூா் மாவட்டம், கோல்புற கிராமத்தைச் சோ்ந்த சந்தனகுமாா் (26) என்பதும், இருவரும் பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments