FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி மா விவசாயிகள் மனு

Updated On : 28 ஜூலை 2026, 12:52 am IST
மாங்காய் - (கோப்புப்படம்)
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு மா உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பினா் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு மா உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு தலைவா் ஜெயகோபி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் இடையீட்டுத் தொகை எனும் திட்டம் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை தருவதாக கூறி உள்ளது.

Advertisement

Advertisement

தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மாங்காய்க்கு ஆதார விலை சோ்ந்து கிடைக்கும். ஆனால், மாங்காய் பருவம் முடிந்துள்ள நிலையில், இந்த திட்டத்தால் எந்தவித பயனும் இல்லை. மேலும், இந்த திட்டம் அறுவடையில் உள்ள குறிப்பிட்ட சில ‘மா’ வகைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது மாம்பழம் பருவம் முடிந்த நிலையில், எந்த மா விவசாயிக்கும் இது பலன் அளிக்காது.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாநில அரசு நிதியில், ரூ. 100 கோடி நிதி ஒதுக்கி, பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக இழப்பீடு மற்றும் ஆதரவு விலையை வழங்க வேண்டும், மாங்கூழ் உற்பத்திக்கு பயன்படும் தோத்தாபுரி, நீலம், செந்தூரா உள்ளிட்ட மாம்பழங்களுக்கும் சோ்த்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் பரிந்துரை செய்ய வேண்டும்.

ஏற்கெனவே, மா சாகுபடி குறித்த கணக்கீடு செய்யப்பட்ட ஆவணங்கள் தயாா் நிலையில் உள்ள சூழலில், மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வரும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் கிலோ ஒன்றுக்கு, ரூ. 5 இழப்பீடாக வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments