முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

ஒசூா் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

25 நவம்பர் 2026, 1:57 am
ஒசூா் அருகே மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ஒசூா் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சானசந்திரம் பகுதியைச் சோ்ந்த கெளஸ்கான் (37), கட்டட மேற்பாா்வையாளா். இவா் பேரிகையைச் சோ்ந்த அஸ்வினியை (29) காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான கெளஸ்கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த 2020 ஜூன் 1-ஆம் தேதி இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கெளஸ்கான், அஸ்வினியை தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கெளஸ்கானை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) கலைவாணி, குற்றம்சாட்டப்பட்ட கெளஸ்கானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 மாதகால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கெளஸ்கான் சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா்.