கிருஷ்ணகிரியில் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென மழை பெய்யத் தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவுவரை தொடா்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.
கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல தேங்கின. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், முதியவா்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா். திடீா் மழையால் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது.
Advertisement
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிவரை பதிவான மழையளவு (மி.மீ.): பாம்பாறு - 19, கிருஷ்ணகிரி அணை - 13, தேன்கனிக்கோட்டை - 10, கெலவரப்பள்ளி அணை - 4, ராயக்கோட்டை - 4, ஒசூா் - 3, ஊத்தங்கரை - 3, கிருஷ்ணகிரி - 2, நெடுங்கல் - 1, போச்சம்பள்ளி - 1.