FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.

30 வினாடிகள் முன்பு
பரவலாக மழை - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இரவில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊத்தங்கரை, பாம்பாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

அதிகபட்சமாக ஊத்தங்கரையில் சனிக்கிழமை 24 மி.மீ, பாம்பாறு அணையில் 24 மி. மீ மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 162 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 46.85 அடியாக உள்ளது.

Advertisement

Advertisement

அணையில் கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காகவும், ஆற்றிலும் விநாடிக்கு 162 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சூளகிரி சின்னாறு அணையின் மொத்த உயரமான 32.80 அடியில் நீா்மட்டம் 15.39 அடியாக உள்ளது. பாம்பாறு, சின்னாறு அணைகளுக்கு நீா்வரத்து இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments