FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ. 12.50 லட்சம் திருட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.12.50 லட்சத்தை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடிச் சென்றனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.12.50 லட்சத்தை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடிச் சென்றனர்.

திருச்செங்கோட்டிலுள்ள சேலம் சாலையில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காவலாளி மாரிமுத்து பணியிலிருந்தார்.

அவர் திங்கள்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுவிட்டு சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லை எனக் காட்டுவதாகக் கூறினர். நீண்ட நேரம் அதேபோல் இருந்ததாம். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பார்த்த போது, இயந்திரத்தில் பணம் வைக்கும் பெட்டகம் திறந்து கிடந்ததைக் கண்டனர். இதுதொடர்பாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவின்படி, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து ரூ.12.50 லட்சம் திருடப்பட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி திருட்டு நடைபெற்றிருப்பதால், வங்கி ஊழியர்கள், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments