FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருட்டு

பரமத்தி வேலூரில் பெண்ணிடம் ஏ.டி.எம். அட்டையை பெற்று நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:46 am IST
பகிர்:

பரமத்தி வேலூரில் பெண்ணிடம் ஏ.டி.எம். அட்டையை பெற்று நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி அகல்யா (44). இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலகப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் புதன்கிழமை இரவு சேந்தமங்கலத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம். இயந்திரம் சரிவர வேலை செய்யவில்லை எனவும், பணம் எடுத்துத் தருவதாக வாங்கிய ஏ.டி.எம். அட்டையை மாற்றிக் கொடுத்தும் அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் அகல்யாவின் கணக்கில் இருந்து ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி அவர்கள் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர். இதையறிந்த அகல்யா பரமத்தி வேலூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், பரமத்தி வேலூர் போலீஸார் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments