அனுமதியற்ற மனைகள் வரன்முறைப்படுத்தும் முகாம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 3) காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 3) காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் இடம் வாங்கியுள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, உரிய தொகை செலுத்தி வரன்முறைப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மனைகளை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே நகராட்சி சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.