FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழா

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சையை ஆரம்பிக்கும் போது, அவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பது
வழக்கம்.
நிகழாண்டில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம், செல்வராஜு, பழனிவேல், விஜயகுமார், கதிர்வேல், செல்வராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் இசக்கியல் நெப்போலியன் வரவேற்றார். நான்காம் ஆண்டு மாணவர் விக்னேஸ்வர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments