அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செக்கான் காடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி நல மையம் எதிரே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு
வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செக்கான் காடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி நல மையம் எதிரே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கன்வாடி மையங்களுக்குஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திஙகள்கிழமைஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட ஏழு அங்கன்வாடி மையங்களுக்கு மின்வசதி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி உள்ளது என்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 7 அங்கன்வாடிமையங்களுக்கும் மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வெண்ணந்தூர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டணம் பேரூர் செயலாளர் குமரேசன், ராசிபுரம் மாணவரணி பாசறை செயலாளர் தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.