FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஆளுநருக்கு எதிரான போராட்டம்: திமுகவினருக்கு பிணை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு பிணை கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 26 ஜூன் 2018, 9:39 am IST
பகிர்:

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு பிணை கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.
 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாமக்கல்லில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன், மேற்கு மாவட்ட திமுக செயலர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ உள்பட மொத்தம் 192 பேரை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
 அவர்களை பிணையில் விடுவிக்கக் கோரி திமுக வழக்குரைஞர் அணியினர் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.எச்.இளவழகனிடம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருப்பதாக நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments