நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கு: பரமத்தி நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்
நீதிபதியை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், யுவராஜ் பரமத்தி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்
நீதிபதியை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், யுவராஜ் பரமத்தி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அவ் வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை பார்த்து ஆவேசமாக பேசினார். இதனையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பரமத்தி குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். யுவராஜிடம் விசாரணை நடத்திய நீதிபதி தனபால் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.