பரமத்தி வேலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சாய்ந்து
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சாய்ந்து நாசமாயின.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு மற்றும் பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை, வாழை மற்றும் கரும்பு அதிக
அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பொத்தனூர் பகுதியில் ரவி என்பவரது வாழையும், வேலூர் சிங்காரப்பாறை கருப்பண்ணார் கோயில் அருகே இளங்கோ என்பவரது வாழை மற்றும் அனிச்சம்பாளையத்தில் சக்திவேல்,அருள் மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர். ராஜா வாய்க்காலில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், சொட்டு நீர் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வாழைகளை காப்பாற்றி வந்தோம். இந்த நிலையில், தற்போது பலத்த காற்றால் குலை தள்ளிய வாழை மரங்கள் சாய்ந்து நாசமானதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.