FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே 2018, 2:38 am IST
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் வீரப்பன், பாண்டியன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் பேசியது: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. நாடு முழுவதும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.80-க்கு மேல் தாண்டியுள்ளது. 2013-க்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அதன் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலை உயர்வினால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வரியால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. டீசல் மீதான மத்திய அரசின் வரி மூன்று மடங்கும், பெட்ரோல் மீதான விலை இரண்டு மடங்கும் அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டை ஒப்பிட்டால் 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசு விதிக்கும் வரி மிக அதிகம். பெட்ரோல், டீசலையும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து, அதன் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலாளர் சாந்திமணி, மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், வட்டார தலைவர்கள் குப்புசாமி, பரமன், இளங்கோ, நகரத் துணைத் தலைவர் குமார், ராசிபுரம் நகரத் தலைவர் முரளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments