நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்டதி.மு.க. செயற்குழுக் கூட்டம்,திருச்செங்கோடு - வேலூர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்டதி.மு.க. செயற்குழுக் கூட்டம்,திருச்செங்கோடு - வேலூர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ் வரவேற்றார்.
நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
நகரச் செயலாளர்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், ஒன்றியச் செயலாளர்கள் தனராசு, கபிலர்மலை சண்முகம், வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், பழனிவேல், சண்முகம், பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், ரங்கசாமி, பூங்கோதை செல்லதுரை, சரவணசுந்தரம் மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியலை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களை கொண்டு சரிபார்க்கும் பணியினை மேற்கொள்ளுவது எனவும், வாக்குச்சாவடி சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்கல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.