வெங்கமேடு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கண்காட்சி
பரமத்தி வேலூர் வெங்கமேடு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு
பரமத்தி வேலூர் வெங்கமேடு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு பரிசாக பாரம்பரியமாக நெகிழி இல்லாமலும், மின்சார உதவி இல்லாமல் பயன்படுத்திய ஆட்டுக்கல், உரல் மற்றும் சிறுதானி உணவுகள் குறித்தும், நெகிழி இல்லா பசுமைப் பள்ளி என்ற பெயரில் கண்காட்சியை நடத்திக் காட்டினர்.
பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 325 மணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்துவது. ஆங்கில வழிக் கல்வியை சமூக ஆர்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் தனியாக ஆங்கில ஆசிரியை நியமனம் செய்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, நாட்டுப்புறக் கலைகள், ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சிறு தானியம் குறித்து அடிக்கடி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மாணவ, மாணவியர் ஆசிரிய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பரிசாக பாரம்பரியமாக நெகிழி இல்லாமலும், மின்சார உதவி இல்லாமல் பயன்படுத்திய ஆட்டுக்கல், உரல் மற்றும் சிறுதாணி உணவுகள் குறித்தும், நெகிழி இல்லா பசுமைப் பள்ளி என்ற பெயரில் கண்காட்சியை நடத்தி காட்டினர்.
கண்காட்சியில் கிராமிய உலகம் உல்லாச கழகம், மண்பானை சமையல் மணக்குது வீடு, ஓலை கூரையில் தூங்கிப்பாரு சொர்க்கம் கண்முன்னே தெரியுது பாரு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், பிளாஸ்டிக் இல்லா பசுமைப் பள்ளியை முதற்கட்டமாக உருவாக்கும் வகையில் பெற்றோர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளியில் பாரம்பரிய முறையில் உணவு வகைகள் தயார் செய்தல், அதற்கான பொருட்கள், சிறுதானிய உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லா காகிதத்தால் செய்யப்பட்ட பரிசு மற்றும் அணிகலன்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.
பின்னர் ஆசிரியர்களின் பெருமை குறித்த நாடகம் மற்றும் வாழ்த்துப்பாடலைப் பாடினர். இதில் பொத்தனூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் நாராயணன், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் மாரப்பன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கனகமணி, கல்லூரிப் பேராசிரியர் ராஜூ, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.