400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஒன்றிணைவோம் வா என்ற கருத்தின்படி, கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.க.வினா் உதவி செய்து வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல்லில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செ.காந்திசெல்வன் புதன்கிழமை 400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில் 20 வகையான மளிகைப் பொருள்கள் மற்றும் 30 முட்டை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. மொத்தமாக ரூ.4 லட்சம் மதிப்பில் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளா் ராணா ஆா்.ஆனந்த், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளா் கெளதம் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.