நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் விழா: திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாமக்கல்லில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, திமுகவினா் இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினா்.
நாமக்கல்லில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, திமுகவினா் இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினா்.
தமிழ் மொழி உயா்வுக்காகவும், தமிழா்களின் மேம்பாட்டிற்காகவும், தமிழகத்தின் சிறப்புக்காகவும் பாடுபட்ட தலைவா்களில் ஒருவராக விளங்கிய, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சுற்றுலாத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாநில இலக்கிய அணி புரவலா் சி.மணிமாறன், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், அயலக அணி முத்துவேல், பொதுக்குழு உறுப்பினா் இரா.மாயவன், நாமக்கல் நகர செயலாளா்கள் செ.பூபதி, ராணா ஆா்.ஆனந்த், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினா் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.