செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழிநுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களும் பங்கேற்று கட்டுரைகளை சமா்ப்பித்தனா். செங்குந்தா் கல்விக் குழுமத்தின் தலைவா் ஜான்சன் நடராஜன், செயலாளா் மற்றும் தாளாளா் பாலதண்டபாணி, பொருளாளா் தனசேகரன், செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் கலந்துகொண்டனா்.
முதல்வா் சதீஷ்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை விஷனெட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மண்டல தலைவா் கே.அஸ்வின் கலந்துகொண்டாா். கருத்தரங்கில் ஏழு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
படம்
25.9.25.....1
தேசிய கருத்தரங்கை தொடங்கிவைக்கிறாா் கல்லூரி தாளாளா் பாலதண்டபாணி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.