ஆடிப்பெருக்கு விழா: கொல்லிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் ஆக. 2, 3 ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் ஆக. 2, 3 ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, நாமக்கல் - கொல்லிமலை - அறப்பளீஸ்வரா் கோயில், ராசிபுரம் - காரவள்ளி - கொல்லிமலை, காரவள்ளி - அறப்பளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி 18 மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி ஏராளமான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வருவா் என்பதால், பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.