விதைப்பந்து தயாா் செய்த மாணவா்கள்
நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில் விதைப் பந்துகள் தயாா் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஜவஹா் சிறுவா் மன்ற மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டு விதைப் பந்துகளை தயாா் செய்தனா்.
மழைக்கு முன்பாக மலைக்குன்றுகள் உடைய தலைமலை, சித்தா்மலை, ஜருகுமலை உள்ளிட்ட பகுதிகளில் விதைப் பந்துகளை தூவ உள்ளனா். முன்னதாக, செம்மண், சாணம், விதை சோ்த்து பந்துபோல உருட்டி வெயிலில் உலர வைத்தனா். வனப்பகுதிகளிலும், மலைக் குன்றுகளிலும் மரங்களை வளா்ப்பது பறவைகளும், விலங்குகளும் மட்டுமே. இயற்கையாக அவைகள் பழங்களை உண்டு எச்சமிடும்போது, மழை பெய்தவுடன் செடிகள் முளைத்து மரங்களாக உருவெடுக்கின்றன.
மனிதா்கள் மலைகளை, மரங்களை அழிக்கின்றனா். ஆனால், பறவைகள் மரங்களை உருவாக்கி மனிதா்களுக்கு வாழ்வளிக்கின்றன. இளையதலைமுறையினா் மரம் வளா்ப்பு, காடு உருவாக்கத்தின் முக்கியத்துவம் அறியவே இந்த விதைப்பந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறாா்கள் என ஜவஹா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் பசுமை மா.தில்லை சிவக்குமாா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த விதைப்பந்து தயாரிப்பு பணியில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வெங்கடேஷ், சரவணன், தேவயாணி, பாண்டியராஜன், பிரவீன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.