FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated On : 28 ஜூலை 2026, 3:09 pm IST
ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் - Center-Center-Delhi
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுவிக்கவும், காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்யவும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவுள்ளது. மேலும், குற்றப் பின்னணி இல்லாத, தடுத்து வைக்கப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மாணவர்கள் மீது கட்டாய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தரவுகளை வெளியிடுவதற்கும் காவல்துறைக்கு நீதிமன்றம் தடை விதித்து முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதிகளில் நடத்தப்பட்ட மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.இதுவரை மாணவர்கள் மீது பதிவான எந்த வழக்கும் ரத்து செய்யப்படவில்லை.

இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பகசி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில், போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட காவல்துறையினர் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

கண்மூடித்தனமாக நடந்து கொண்டவர்கள், ஒன்றும் அறியாத மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது சட்டம் நடவடிக்கை எடுக்கும். அதற்கு, சுதந்திரமான முழுமையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு யார் பொறுப்பு என்பது உறுதி செய்யப்படாவிட்டால் விசாரணை அர்த்தமற்றதாகிவிடும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.

எனவே, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பதிவான அனைத்து சிசிடிவி காட்சிகள், டிரோன் பதிவுகள், சட்டையில் இருக்கும் காமெராவில் பதிவானவை என அனைத்தும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தனி நபர் தகவல்கள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். தற்போதைக்கு பொது வெளியில் கொண்டு வரப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments