தில்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்கள்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
தில்லி ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் ஆயுதப் படையினரும், காவல்துறையும் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய பதிவுகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி, மாணவர்கள் அமைதியாகப் பேரணி செல்ல முயன்றபோது, அவர்கள் மீது காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள், ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாணவர்களின் போராட்டத்தின்போது அதிரடிப்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பான பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
பெல்லட் குண்டுகளால் காயமடைந்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராடிய மாணவர்கள் மீது பயன்படுத்தி ஆயுதப் பிரயோகம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் குறித்து விவரங்களை பத்திரப்படுத்தவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Details of weapons used in the Delhi student protest: Supreme Court issues new order.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.