இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி இல்லை: தில்லி காவல்துறை
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி வழங்கப்படவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் நடத்த எந்தவொரு கூட்டத்திற்கோ, தனி நபருக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் அடிப்படையில் அங்கு கூடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜந்தர் மந்தரில் கூடுமாறு மக்களை அழைக்கும் விதமான பல காணொலிகளும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-க்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் தில்லியில் ஏற்கனவே அமலில் உள்ளன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் உள்பட 5 அல்லது அதற்கு மேல் நபர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
போராட்டம் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பும் காணொலிகள் மற்றும் பதிவுகளை மக்கள் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை உருவாக்குவோர் அல்லது பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
The Delhi Police has stated that permission was not granted for the protest against reservation at Jantar Mantar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.