FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவர் போராட்டம் எதிரொலி: தில்லியில் மதுக்கடைகளுக்கு புதிய நேரக் கட்டுப்பாடு!

ஜந்தர் மந்தர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மதுபானக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது பற்றி..

Updated On : 25 ஜூலை 2026, 1:41 pm IST
டாஸ்மாக் கடை
பகிர்:

தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக் கடைகள் முன்னதாக மூடப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்துக் கடந்த ஜூன் 20 முதல் தலைநகர் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், மாணவர் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, வார இறுதி நாள்களில் தில்லி முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் வழக்கமான இரவு 10 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்கே மூடப்படும் என அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மத்திய தில்லி பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கக் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்று தில்லி காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டக் காலத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுப்பதே இந்த தற்காலிக நேர மாற்றத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறினர்.

வியாழக்கிழமை நகரின் பல பகுதிகளில் போராட்டம் தொடர்ந்ததால், மதுக்கடைகள் முன்னறிவிப்பு ஏதுவுமின்றி வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தகட்ட உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படாத பட்சத்தில், வார இறுதி நாள்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் மீண்டும் வழக்கமான நேரமான இரவு 10 மணிக்கு மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments