ஜந்தர் மந்தர் போராட்டம்... ‘ஏஐ’ கேமராக்கள் வைத்து அடையாளம் காணும் தில்லி காவல்துறை!
போராட்டத்தில் ஈடுபடுவோரை ஆதாருடன் அடையாளம் காணும் ‘ஏஐ’ கேமராக்களை பயன்படுத்தும் தில்லி காவல்துறையைப் பற்றி...
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோரை ஆதாருடன் அடையாளம் காணும் ‘ஏஐ’ கேமராக்களை தில்லி காவல்துறை பயன்படுத்தி வருகிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள் பலரின் மீதும் தடியடி நடத்தினர்.
Advertisement
Advertisement
கரப்பான்பூச்சி கட்சியினர் அறிவித்த போராட்டம் 35-ஆவது நாளை எட்டிய நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு சுமுகமான தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கரப்பான்பூச்சி கட்சி பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தில்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் மத்திய அரசு தரப்பிலும், சிஜேபி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் முகங்களை ஆதாருடன் செய்யறிவு கேமராக்கள் வைத்து அடையாளம் கண்காணிப்பு வாகனங்களை தில்லி காவல்துறை நிலைநிறுத்தி முகஅடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.
ஜந்தர் மந்தர் பகுதியில் போராடத்தின் போது அத்துமீறலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு போராட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பதிவான விடியோக்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடையாளம் காணப்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், கரப்பான்பூச்சி கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், வாகனத்தின் மேலே 360 டிகிரி கேமராவில் பதிவான முகங்கள், செய்யறிவின் மூலம் ஆதாரில் பதிவான முகங்களுடன் ஒப்பிடப்பட்டு அவர்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான தெளிவான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் ஆதார் தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் தில்லி காவல் துறை தரப்பில் தகவல்கள் எதுவுமில்லை.
இதற்கு முன், 2023 ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டிற்கு இக்ஷானா வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் செய்யறிவும் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
AI-powered facial recognition vans deployed at Delhi's Jantar Mantar have triggered a fresh privacy debate after viral videos claimed protesters were being identified in real time. While social media users suspect Aadhaar links, there is no official confirmation that the system is connected to the database.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.