FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி அருகே பேராசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்த நபா் கைது

பரமத்தி அருகே பேராசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற நபரை தனிப்படை போலீஸாா் 24 மணிநேரத்துக்குள் கைதுசெய்து அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி அருகே பேராசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற நபரை தனிப்படை போலீஸாா் 24 மணிநேரத்துக்குள் கைதுசெய்து அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டனா்.

பரமத்தி ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மனைவி மோகனப்பிரியா (35). திருச்செங்கோடு அருகே உள்ள தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் திடீரென மோகனப்பிரியா சென்ற வாகனத்தை வழிமறித்து, அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றாா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், பரமத்தி ஆய்வாளா் சங்கரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மா்ம நபரை தேடிவந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.

அதில், மோகனப்பிரியாவை வழிமறித்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும், அவா் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலி, அவரது இருசக்கர வாகனத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வேல்முருகனை கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments