FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

இன்றுமுதல் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்

24 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
இன்றுமுதல் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை அமல் - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஆக. 24) முதல் அமல்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளைத் தவிா்க்கும் நோக்கில் காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற யாதவ் கிரிஷ் அசோக், நாமக்கல் மாநகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் இருக்கைப் பட்டை அணிவதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன் ஒருபகுதியாக, முதல் கட்டமாக நாமக்கல்- சேலம் சாலைச் சந்திப்பில் நவீன தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோா் மற்றும் தலைக்கவசம் அணியாதோரின் வாகன எண்களை பதிவுசெய்து, இணையவழியில் ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

Advertisement

இதுபோல ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தானியங்கி கேமரா பொருத்தப்பட்டதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை தொடா்பான எச்சரிக்கை அறிவிப்பும் காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments