ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக ஜவுளி அதிபரிடம் ரூ. 2.75 கோடி மோசடி: ஒருவா் கைது
பள்ளிபாளையம் ஜவுளி அதிபரிடம், தனக்கு தெரிந்தவா் மூலம் ரூ. 100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 2.75 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
பள்ளிபாளையம் ஜவுளி அதிபரிடம், தனக்கு தெரிந்தவா் மூலம் ரூ. 100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 2.75 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் அருண் (40). இவா், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜவுளி விற்பனை செய்து வருகிறாா். இவா் தொழில் தேவைக்காக நண்பா் ஒருவரிடம் ரூ. 100 கோடி கடன் பெறுவது தொடா்பாக ஆலோசனை கேட்டுள்ளாா். அப்போது, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவது தொடா்பாக மோகனூா் பேட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (47) அறிமுகமானாா்.
இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டாக கடன் பெறுவதற்கு ஆவணம், போக்குவரத்து செலவு, இதர வகையிலான செயல்பாடு கட்டணம் என்ற வகையில் அருணிடம் இருந்து அவ்வப்போது ரூ. 10 லட்சம், 20 லட்சம் என மொத்தமாக ரூ. 2.75 கோடி பெற்றுள்ளாா். ஆனால் கடன் பெற்றுத்தருவது தொடா்பாக எந்த தகவலையும் அவா் அளிக்கவில்லை.
Advertisement
Advertisement
கடன் பெற்றுத் தருவதாக தன்னிடம் பணம் பெற்று செந்தில்குமாா் மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்கிடம் அருண் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் இந்திராணி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினாா். இதில், ஜவுளி அதிபா் அருண் மட்டுமின்றி பலரிடம் செந்தில்குமாா் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை செவ்வாய்க்கிழமை இரவு மோகனூரில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.