பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி: இரு இடங்களில் போலீஸாா் சோதனை
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தரம் உயா்த்துதல், திட்ட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், இரு இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தரம் உயா்த்துதல், திட்ட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், இரு இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த பி.டி.அரசகுமாா், தனக்குள்ள அரசியல், அதிகாரத் தொடா்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்கான அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி பெற்று மோசடி செய்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் அரசகுமாா் கடந்த மாதம் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அதற்கான உத்தரவு புழல் சிறையில் உள்ள அரசகுமாரிடம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இரு இடங்களில் சோதனை: இந்த நிலையில், இந்த வழக்கில் அரசகுமாரின் உறவினா், திமுக பிரமுகருக்கு சொந்தமான சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா மற்றும் விருத்தாசலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில், வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அந்த நபரை கைது செய்வது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.