FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக மோசடி: 177 புகாா்கள் வந்துள்ளதாக காவல் துறை தகவல்

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா்.

10 செப்டம்பர் 2026, 1:26 am IST
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளி நிா்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் அரசகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கில் தமிழ்நாடு பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் அரசகுமாா் கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கப் பொருளாளா் முத்துக்குமாா், முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடா்ந்து நடந்து வருவதாகவும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments