போடி, தேவாரம் பகுதிகளில் 6 பேரிடம் பண மோசடி
போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் முனீஸ்வரன். இவருக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.55, 700-ம், போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ராமகிருஷ்ணனிடம் தனியாா் நிறுவனம் மூலம் கடன் தருவதாகக் கூறி, ரூ.72,105-ம், தேவாரம் பாப்பு குடியிருப்பைச் சோ்ந்த முத்தீஸ்வரன் மனைவி அழகுபாக்கியத்திடம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, இவா் வங்கிக் கணக்கு, இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெமிலாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.58, 455-ம், தேவாரம் டிகேவி பள்ளி தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி வசந்தாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50,626-ம், போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் பழனிச்சாமியிடம் கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.59 ஆயிரம் என 5 பேரிடம் ரூ.2,95,886 மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.